Powered By Blogger

Sunday, February 24, 2013

அங்காளம்மன் பெயர்க்காரணம்: "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். இணைதல் என்பதை இருவகைகளில் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் இரண்டு வரங்கள் பெற்றான். ஏழு பிறவி எடுத்து முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதமும் தன்னை கொல்லக்கூடாது என்பவையே அந்த வரங்கள். இதனால் தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தினான். அது மட்டுமல்ல. வரம் தந்த சிவனையே மறந்து விட்டான். தேவர்களை துன்பப்படுத்தினான். இத்தனை வரங்கள் பெற்றிருந்தாலும் ஒரே ஒரு வரம் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அது தான் குழந்தை வரம். 108 பெண்களை மணந்தான். ஆனாலும் பலனில்லை.
குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாள கண்டனின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ முதல் பிறவியில் மீனாட்சியாகவும், அடுத்த பிறவியில் காமாட்சியாகவும், மூன்றாவது பிறவியில் விசாலாட்சியாகவும், நான்காவது பிறவியில் காந்திமதியாகவும்ஐந்தாம் பிறவியில் மாரியம்மனாகவும், ஆறாவது பிறவியில்  காளியாகவும் உருவெடுக்க வேண்டும். ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன் படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள்.
காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். ஆனால், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். அதன் காரணமாக வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள். அவளது அங்கம் வெந்தது. இப்போதும் யாராவது இறந்து விட்டால், "அங்கம் கரைத்தாயிற்றா?' எனக் கேட்பது உண்டு. அங்கம் என்றால் சாம்பல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கமாகிய சாம்பலிலிருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள். இறந்த உடலை ஒன்றிணைத்து பிறந்தவளே அங்காளம்மன். பக்தர்கள் இறைவனுடன் மனம் ஒன்ற வேண்டும். அவருடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலும் தேவிக்கு "அங்காளம்மன்' என்ற பெயர் ஏற்பட்டது.

=====================================================================

No comments:

Post a Comment

Pages