Powered By Blogger

Tuesday, February 26, 2013



புராண கதை
  சிவபெருமானை நோக்கி தவம் இருந்த பிரம்மா எனக்கும் தங்களை போன்று 5 முகம் வேண்டும் என்று வரம் கேட்டார். வேண்டுவோருக்கு எளிதில் வரங்களை வழங்கும் சிவபெருமான் படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு அந்த வரத்தை சட்டென்று வழங்கினார்.
  இதன் மூலம் ஏற்கனவே 4 திரு முகங்கள் கொண்ட பிரம்மா 5 திருமுகங்கள் பெற்றார்.அதன்தொடர்ச்சியாக அவருக்கு அகந்தை ஏற்பட்டது.தன்னை சிவபெருமானுக்கு இணையாக கருதினார்.சிவபெருமனிடம் அகந்தையில் போருக்கு சென்றார்.
  கோபம் கொண்ட உமாதேவி, பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டிக்குமாறு சிவபெருமானிடம் கூறினாள்.இதையடுத்து, பிரம்மாவின் அகந்தயை அடக்க முடிவு செய்தார் சிவபெருமான்.இதையொட்டி,சிவபெருமானுக்கும்,பிரம்மாவுக்கும் போர் நிகழ்த்து.
  வீரப்பத்திரர் உருவம் எடுத்த சிவபெருமான் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஐந்தாவது தலயை குத்தி வீழ்த்தினார்.துண்டிக்கப்பட்ட தலை இருந்த இடத்தில் மீண்டும் முளைத்தது.மறுபடியும் சிவபெருமான் அந்த தலையை துண்டிக்க அது மறுபடியும் தோன்றியது.
  இதையடுத்து அந்த் தலையை தனது கையாலேயே கிள்ளியெடுக்க முயன்றார் சிவபெருமான். அவர் பிரம்மாவின் தலையை கையால் கிள்ளியபோது அது அவரது கையோடு ஒட்டிக்கொண்டது. அவர் உன்மத்தம் (தன்னிலை மறந்த கோலம்) நிலையை அடைந்தார்.அத்துடன் பிரம்மஹத்தி தோஷமும் ஏற்படட்து.
  தனது கணவர் பிரம்மாவின் ஐந்தாவது தலை துண்டிக்கப்படுவதற்கு காரணம் பார்வதிதேவிதான் என்று கருதி வெகுண்டெழுந்த சரஸ்வதி, கோர ரூபியா புற்று வடிவமாக போகக்டவு என்று அவளை சபித்தாள்.
  உடனே பார்வதிதேவி காளியாக மாறினாள்.அந்த அங்கத்தில் அவள் பாம்பு ரூபமாக இருப்பதாள் ‘அங்காள பரமேஸ்வரி’ என்று பெயர் பெற்றாள்
. இதற்கிடையில்,சிவபெருமான் கயில் ஒட்டிக்கொண்ட பிரம்மாவின் தலை ,சிவபெருமான் என்ன சாப்பிட்டாலும் முந்திக்கொண்டு சாப்பிட்டது.இதுபற்றி அங்காள பரமேஸ்வரியாக மாறிய பார்வதிதேவி விஷ்ணுவிடம் முறையிட, அவர் ஓர் ஆலோசனை சொன்னார்.
  அதன்படி பார்வதிதேவி சிவபெருமானுக்கு சுண்டல்,பழங்கள் ஆகியவற்றை ஊட்டிவிட அதை பிரம்மாவின் தலையே முந்திகொண்டு வாங்கி சாப்பிட்டது.அடுத்தமுறை பார்வதி கொடுத்தபோது,உணவை கையில் இருந்து தவறவிட்டாள் .அதை உட்கொள்ள பிரம்மாவின் கபாலம் கீழே இறங்க ,அதை அம்பாள் தனது காலால் மிதித்து அழித்தார்.இதையடுத்து பழைய நிலையை அடைந்தார் சிவபெருமான்.
. இந்த சம்பவம் நடந்தது ஒரு மாசி அமாவாசை அன்று,இதை நினைவுபடுத்தும் வகையில் ‘மயான கொள்ளை’ என்ற வைபவத்தையும்,கனிகள் தாணியசாதம் சூறையிடுவதையும் இன்றளவும் நடைபெறுகின்றது.வீரகனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வைபவம் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

Pages