Powered By Blogger

Tuesday, February 26, 2013



புராண கதை
  சிவபெருமானை நோக்கி தவம் இருந்த பிரம்மா எனக்கும் தங்களை போன்று 5 முகம் வேண்டும் என்று வரம் கேட்டார். வேண்டுவோருக்கு எளிதில் வரங்களை வழங்கும் சிவபெருமான் படைப்பு கடவுளான பிரம்மாவுக்கு அந்த வரத்தை சட்டென்று வழங்கினார்.
  இதன் மூலம் ஏற்கனவே 4 திரு முகங்கள் கொண்ட பிரம்மா 5 திருமுகங்கள் பெற்றார்.அதன்தொடர்ச்சியாக அவருக்கு அகந்தை ஏற்பட்டது.தன்னை சிவபெருமானுக்கு இணையாக கருதினார்.சிவபெருமனிடம் அகந்தையில் போருக்கு சென்றார்.
  கோபம் கொண்ட உமாதேவி, பிரம்மாவின் ஐந்தாவது தலையை துண்டிக்குமாறு சிவபெருமானிடம் கூறினாள்.இதையடுத்து, பிரம்மாவின் அகந்தயை அடக்க முடிவு செய்தார் சிவபெருமான்.இதையொட்டி,சிவபெருமானுக்கும்,பிரம்மாவுக்கும் போர் நிகழ்த்து.
  வீரப்பத்திரர் உருவம் எடுத்த சிவபெருமான் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஐந்தாவது தலயை குத்தி வீழ்த்தினார்.துண்டிக்கப்பட்ட தலை இருந்த இடத்தில் மீண்டும் முளைத்தது.மறுபடியும் சிவபெருமான் அந்த தலையை துண்டிக்க அது மறுபடியும் தோன்றியது.
  இதையடுத்து அந்த் தலையை தனது கையாலேயே கிள்ளியெடுக்க முயன்றார் சிவபெருமான். அவர் பிரம்மாவின் தலையை கையால் கிள்ளியபோது அது அவரது கையோடு ஒட்டிக்கொண்டது. அவர் உன்மத்தம் (தன்னிலை மறந்த கோலம்) நிலையை அடைந்தார்.அத்துடன் பிரம்மஹத்தி தோஷமும் ஏற்படட்து.
  தனது கணவர் பிரம்மாவின் ஐந்தாவது தலை துண்டிக்கப்படுவதற்கு காரணம் பார்வதிதேவிதான் என்று கருதி வெகுண்டெழுந்த சரஸ்வதி, கோர ரூபியா புற்று வடிவமாக போகக்டவு என்று அவளை சபித்தாள்.
  உடனே பார்வதிதேவி காளியாக மாறினாள்.அந்த அங்கத்தில் அவள் பாம்பு ரூபமாக இருப்பதாள் ‘அங்காள பரமேஸ்வரி’ என்று பெயர் பெற்றாள்
. இதற்கிடையில்,சிவபெருமான் கயில் ஒட்டிக்கொண்ட பிரம்மாவின் தலை ,சிவபெருமான் என்ன சாப்பிட்டாலும் முந்திக்கொண்டு சாப்பிட்டது.இதுபற்றி அங்காள பரமேஸ்வரியாக மாறிய பார்வதிதேவி விஷ்ணுவிடம் முறையிட, அவர் ஓர் ஆலோசனை சொன்னார்.
  அதன்படி பார்வதிதேவி சிவபெருமானுக்கு சுண்டல்,பழங்கள் ஆகியவற்றை ஊட்டிவிட அதை பிரம்மாவின் தலையே முந்திகொண்டு வாங்கி சாப்பிட்டது.அடுத்தமுறை பார்வதி கொடுத்தபோது,உணவை கையில் இருந்து தவறவிட்டாள் .அதை உட்கொள்ள பிரம்மாவின் கபாலம் கீழே இறங்க ,அதை அம்பாள் தனது காலால் மிதித்து அழித்தார்.இதையடுத்து பழைய நிலையை அடைந்தார் சிவபெருமான்.
. இந்த சம்பவம் நடந்தது ஒரு மாசி அமாவாசை அன்று,இதை நினைவுபடுத்தும் வகையில் ‘மயான கொள்ளை’ என்ற வைபவத்தையும்,கனிகள் தாணியசாதம் சூறையிடுவதையும் இன்றளவும் நடைபெறுகின்றது.வீரகனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் இந்த வைபவம் நடத்தப்படுகிறது.


மயான கொள்ளை
வீரகனூர் ஸ்ரீ பருவதராஜகுல ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத சிவராத்திரியை அடுத்து வரும் அம்மாவாசை அன்றுமயான கொள்ளைஎன்ற வைபவம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காலையில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபத்தில் மயானத்திற்கு சென்று பிரம்ம கபாலத்தினை சம்ஹாரம் செய்து ,இறைவனுக்கு ஏற்ப்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விமோசனம் கிடைக்கச் செய்கிறாள்.
இந்த நாளில் பக்தர்கள் தங்கள் பிராத்தனைகளை செலுத்துவதற்காக சுண்டல், கொழுக்கட்டை, காய்-கனிகள், கிழங்கு வகைகள் அம்மனுக்கு படைத்து சூறைவிட்டு இந்த மயான கொள்ளை உற்சவத்தினை கொண்டாடுகிறார்கள்.

Sunday, February 24, 2013

அங்காளம்மன் பெயர்க்காரணம்: "அங்காளம்' என்ற சொல்லுக்கு "இணைதல்' என்று பொருள். இணைதல் என்பதை இருவகைகளில் எடுத்துக்கொள்ளலாம். வல்லாள கண்டன் என்ற அசுரன் கடும் தவம் செய்து சிவபெருமானிடம் இரண்டு வரங்கள் பெற்றான். ஏழு பிறவி எடுத்து முடித்த ஒருவரால் தான் தனக்கு அழிவு வர வேண்டும். எந்த ஆயுதமும் தன்னை கொல்லக்கூடாது என்பவையே அந்த வரங்கள். இதனால் தன்னை யாரும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் சர்வாதிகார ஆட்சி செலுத்தினான். அது மட்டுமல்ல. வரம் தந்த சிவனையே மறந்து விட்டான். தேவர்களை துன்பப்படுத்தினான். இத்தனை வரங்கள் பெற்றிருந்தாலும் ஒரே ஒரு வரம் மட்டும் அவனுக்கு கிடைக்கவில்லை. அது தான் குழந்தை வரம். 108 பெண்களை மணந்தான். ஆனாலும் பலனில்லை.
குழந்தையில்லாத அவன் மேலும் நெறி கெட்டு திரிந்தான். வல்லாள கண்டனின் கொடுமைகளுக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார். பார்வதி தேவியை அழைத்து, நீ முதல் பிறவியில் மீனாட்சியாகவும், அடுத்த பிறவியில் காமாட்சியாகவும், மூன்றாவது பிறவியில் விசாலாட்சியாகவும், நான்காவது பிறவியில் காந்திமதியாகவும்ஐந்தாம் பிறவியில் மாரியம்மனாகவும், ஆறாவது பிறவியில்  காளியாகவும் உருவெடுக்க வேண்டும். ஏழாவது பிறவி பற்றி நான் பிறகு சொல்வேன் என்றார். அதன் படி அன்னை பார்வதி ஆறு பிறவிகள் எடுத்து மக்களுக்கு அருள்பாலித்தாள்.
காளியாக உருவெடுத்த போது, சிவனையும் மிஞ்சிய சக்தியாக எண்ணி, அவரை நடனப்போட்டிக்கு அழைத்தாள். ஆனால், அந்த போட்டியில் தோல்வி அடைந்தாள். அதன் காரணமாக வெட்கம் தாளாமல் தன்னையே எரித்து கொண்டாள். அவளது அங்கம் வெந்தது. இப்போதும் யாராவது இறந்து விட்டால், "அங்கம் கரைத்தாயிற்றா?' எனக் கேட்பது உண்டு. அங்கம் என்றால் சாம்பல். சாம்பலான காளியை மீண்டும் ஒன்று கூட்டினார் சிவன். அவள் உயிர் பெற்று எழுந்தாள். அங்கமாகிய சாம்பலிலிருந்து அவள் பிறந்ததால் "அங்காளம்மன்' எனப்பட்டாள். இறந்த உடலை ஒன்றிணைத்து பிறந்தவளே அங்காளம்மன். பக்தர்கள் இறைவனுடன் மனம் ஒன்ற வேண்டும். அவருடன் தன்னை இணைத்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலும் தேவிக்கு "அங்காளம்மன்' என்ற பெயர் ஏற்பட்டது.

=====================================================================

Saturday, February 23, 2013
































முகூர்த்தகால் நடும் விழா
ஸ்ரீ பருவதராஜ குல ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் மயானக்கொள்ளை திருவிழா 2013

Pages